தமிழ் மொழி இலக்கியத் திறன் தேர்வு, அக்டோபர்-2025 தேர்வு முடிவுகள்:
தேர்வின் நோக்கம்: பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்ற தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த இத்தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு நாள்: 2025-2026 கல்வியாண்டிற்கான இத்தேர்வு 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.
பரிசுத் தொகை: இத்தேர்வில் தெரிவு செய்யப்படும் 1500 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500/- வீதம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பட்டோர் விவரம்:
50% இடங்கள் (750 மாணவர்கள்): அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
மீதமுள்ள 50% இடங்கள் (750 மாணவர்கள்): அரசுப் பள்ளி உட்பட இதர தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
தேர்வு முறை: தமிழக அரசின் 10-ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டன.
எழுதியோர் எண்ணிக்கை: மொத்தம் 2,57,761 மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள்: மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
திருத்தம் கோருதல்: தேர்வர்களின் பெயர், முகப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி மற்றும் பள்ளியின் நிர்வாகம் (அரசுப் பள்ளி / அரசு உதவிபெறும் பள்ளி / தனியார் பள்ளி) ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின், அதனை 20.11.2025 மாலை 5.00 மணிக்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாகவும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
















என்னிடம் 30க்கும் மேல் இயற்பியல் புத்தகங்களின் பிடிஎப் உள்ளது. இவைகள் அனைத்தும் நீட் தோ்வுகளுக்கு பயன்படும் வகையில் வெளியிடப்பட்ட புத்தகங்களின் பிடிஎப் ஆகும். அதை தங்களுக்கு அனுப்பினால் நிரந்தரமாக கல்விச்சோலையில் பதிவிட்டால் மாணவர்கள் ஆசிரியா்கள் பயன் பெறுவாா்கள். நான் எப்படி அதை அனுப்புவது?
ReplyDelete