தமிழகம் முழுவதும் அரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் காலியிடங்கள்.செட், நெட் தேர்ச்சி பெற்று 35,000 பேர் காத்திருப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அரசுக்கல்லூரிகளில் 2013ம் ஆண்டுக்கு பின் உதவி பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர் பாக தேர்வர்கள், கவுரவ விரி வுரையாளர்கள் கூறிய தாவது தமிழகத்தில் அர சுக் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர மாநில அரசு நடத் தும் செட் தேர்வு அல்லது தேசிய அளவில் நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத் தும்நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும் அல் லது அத்துடன் பி.எச்டிபட் டம் பெற்றிருக்கவேண்டும். 2010ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணி கள் பெரிய அளவில் நிரப்பப்படவில்லை . 2010, 2012ம் ஆண்டுகளில் கோவை பாரதியார் பல்கலைக்கழ கம் செட் தேர்வு நடத்தி யது. 2013ம் ஆண்டில் அறி விக்கை வெளியிடப்பட்டு 2015ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே ஆயிரம் பேர் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து உரு வான காலிப்பணி யிடங்கள் நிரப்பப்பட்ட வில்லை , 2016 முதல் 2018 வரை 3 ஆண்டுகள் கொடைக் கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து உதவிப் பேராசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படவில்லை , தமிழகத்தில் கடந்த 9 ஆண் டுகளில் செட், நெட் தேர் வுகளில் தேர்ச்சி பெற்றும் பி.எச்டி முடித்து 35,000 பேர் வரை உதவி பேராசி ரியர் நியமனத்துக்காக காத் திருக்கின்றனர்.தமிழக அர சுக்கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளில் புதிய படிப்புகள் பல தொடங்கப்பட்டுள்ளன, அவற்றின் மூலம் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன, அதே போல் நகர் புறங் களில் உள்ள அரசுக்கல்லூரிக ளி ல் இரண்டு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் 1600 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் கவு ரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். செட், நெட், பி.எச்டி. தேர்ச்சி பெற்ற 35,000 பேரில் 5 ஆயிரம் பேர் வரை தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்துக்கு பணி செய்து வருகின்றனர், மற்றவர்கள் தங்களின் படிப்புக்கு சம்பந்தம் இல் லாத வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு தேர்வர்கள், கவுரவ விரிவுரையாளர் கள் கூறினர்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||