பிளஸ் 2 தேர்வு குறித்து அனைவரிடமும் 2 நாள் கருத்து கேட்கப்படும் - முடிவினை முதல்வர் ஓரிரு தினங்களில் அறிவிப்பார்...

பிளஸ் 2 தேர்வு குறித்து அனைவரிடமும் 2 நாள் கருத்து கேட்கப்படும் - முடிவினை முதல்வர் ஓரிரு தினங்களில் அறிவிப்பார்...
 • பொது மக்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்ட பிறகு பிளஸ் 2 தேர்வு தொடர்பாக இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 • சிபிஎஸ்இ பாடத்திட் டத்தின் கீழ் நடத்தப்படும் 12ம் வகுப்புக்கான தேர்வு இந்த ஆண்டு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி:
 • முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து என்று சொல் லவில்லை. ஆனால் மாண உடல் நலன் மற் றும் பாதுகாப்பு முக்கியம் என்று தெரிவித்துள்ளார். 
 • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த வாரம் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், எல்லா மாநிலங் களும் தேர்வு நடத்த வேண்டும் பாதுகாப்புடன் நடத்த வேண் டும் என்று தெரிவித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தேர்வை ரத்து செய்துள்ளார். 
 • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடத்த கூட்டதுக்கான கடிதத்தில், வாய்ப்பு, வாய்ப்பு 2 என்று குறிப்பிட்டு, எப்படி எல்லாம் இந்த தேர்வை நடத்தலாம் என்றும் நேரத்தை குறைக்கலாமா, மாண வர்களுக்கு ஏற்ப தேர்வு மையங்களை அதிகரிக்கலாமா என்பது போன்ற வாய்ப்புகளை அவர்கள் கொடுத்திருந்தனர். 
 • இவை சிபிஎஸ்இ மாணவர்களை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டு இருந்தன. 
 • அதற்கு நாங்கள் பதில் அளிக்கும் போது, மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களையும் கருத்தில் கொண்டு சில கருத்துகளை கொடுத் திருக்க வேண்டும் என்று நாங்கள் பதில் அளித்து இருந்தோம். 
 • ஆனால் ஒட் டுமொத்தமாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் உள்ள 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளனர். 
 • தமிழக முதல்வரின் கருத்து என்பது இதை ரத்து செய்வதற்கு முன்பாக, கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், மாணவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களை போன்றோரை அழைத்து எப்படி கருத்து கேட்டோமோ அதே போல, வரும் இரண்டு நாட்களில் அவர்களிடம் கருத்து கேட்டு அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். 
 • உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு, அத்துடன் மற்ற மாநிலங்க ளின் நிலைப்பாடு என்ன என்பதையும் பார்த்து 2 நாளில் அதற்கான சிறந்த இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் முதல்வர் சொல்லியிருக்கிறார். 
 • அந்த வகையில் 2 நாளில் இதற்கான கூட்டங்களை முடிக்க திட்டமிட்டுள் ளோம். 
 • முதல்வர் 2 நாளில் கருத்து கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார். அதன்படி 2 நாளில் வரும் கருத்துகளின் அடிப்படையில் நமது மாநிலத்துக்கு என்ன தேவையோ அதை கண்டிப்பாக செய்வார். மாணவர்களின் சங்கங்களை அழைத்து கருத்து கேட்டோம். அதேபோல இப்போதும் செய்வோம். 
 • மாணவர்கள் தரப்பில் சிலர் தேர்வு வேண்டும் என்கின்றனர். சிலர் வேண்டாம் என்கின்றனர். இது போல கலப்படமாக கருத்து தெரி விக்கின்றனர்.
 • 2 நாளில் வரப் பெறும் கருத்தில் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை பார்ப் போம். ம
 • திப்பெண்களை மதிப்பீடு செய்வது மிக முக்கியமாக இருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்களின் உடல் நலனும் முக்கியம். அந்த நிலையில் தான் தமிழகம் இருந்து வருகிறது. 
 • திடீரென்று தேர்வு ரத்து என்று அறிவித்த பிரதமரும் நாங்கள் நல்ல முறையில் மதிப்பெண்களை மதிப்பீடு செய்வோம். அதிலும் தெளிவு இல்லை. இவற்றை எல்லாம் முதல்வரிடம் எடுத்து சொல்லி அவர் இறுதியில் என்ன சொல் கிறாரோ அதுமாதிரி செய் வோம். 
Popular Posts
 1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள்
LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS)
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

MHC ALL DISTRICT RECRUITMENT 2021 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.06.2021. பதவி : அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதார பணியாளர், காவலர் உள்ளிட்ட பணி...பணியிட எண்ணிக்கை : 3559. | Click Here

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.