சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 28-ந் தேதி விடுமுறை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையொட்டி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வருகிற 28-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் எ.வ. வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 28-ந் தேதி மாலை 4.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்க விழா நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் 800-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்ற இருக்கிறார்கள். 6 ஆயிரம் பேர் அமரும் வகையில் நேரு அரங்கம் தயாராக இருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா, சென்னையில் நடைபெறுவதால் அன்றைய தினம் (28-ந் தேதி) சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிப்பது என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு வருகிற 28-ந் தேதி உள்ளூர் விடுமுறை உத்தரவு அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||