நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையில், அந்த தேர்வில் மாநில பாடத் திட்டத்தில் இருந்து 162 வினாக்கள் கேட்கப்பட்டதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் 2022-23-ம் கல்வியாண்டு இளநிலை நீட் தேர்வு கடந்த 17-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் தேர்வை எதிர்கொண்டனர்.இந்த தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல இந்த ஆண்டும் நீட் தேர்வில் மாநிலப் பாடத் திட்டத்தில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை பொறுத்தவரையில், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு முதல் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 180 வினாக்களுக்கு பதில் அளிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதேபோலவே, இந்த ஆண்டும் 200 வினாக்களுக்கு நீட் தேர்வு நடந்தது.
அவ்வாறு கேட்கப்பட்ட 200 வினாக்களில் 162 வினாக்கள் மாநில பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 38 வினாக்கள் இதர பாடத் திட்டங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளன.
162 வினாக்களில் இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட 50 வினாக்களில் 48 வினாக்களும், வேதியியலில் 50-க்கு 40 வினாக்களும், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவை சேர்த்து 100 வினாக்களில் 74 வினாக்கள் மாநில பாடத் திட்டத்தில் இருந்து இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாநில பாடத் திட்டத்தில் கேட்கப்பட்ட வினாக்கள் சற்று குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு (2021) நீட் தேர்வில் 165 வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. இதில் இயற்பியலில் 48 வினாக்களும், வேதியியலில் 38 வினாக்களும், தாவரவியலில் 34 வினாக்களும், விலங்கியலில் 45 வினாக்களும் மாநில பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன.
அதற்கு முந்தைய ஆண்டை (2020) பார்க்கும் போது, 180 வினாக்களில் 176 வினாக்கள் மாநில பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அதாவது 97 சதவீதம் வினாக்கள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன. இந்த புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது, மாநில பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் வினாக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
| முக்கியச்செய்திகள் |
| TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
| Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |









No comments:
Post a Comment