தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியின்கீழ் வரும் சுகாதார ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் காலியாக உள்ள 1,429 இடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 16
- போட்டித் தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
தகுதிகள்:
- கல்வித் தகுதி:
- உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.
- தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரால் வழங்கப்பட்ட 2 ஆண்டு கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சான்றிதழ் அல்லது சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: பொதுப் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு இல்லை.
- மொழித் தகுதி: கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
சிறப்பு மதிப்பெண்கள்:
கரோனா காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, பணிக்காலத்துக்கு ஏற்ப 2 முதல் 5 சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள ஆண்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக நவம்பர் 16-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment