அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, NET/SET தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 50% உள் இட ஒதுக்கீடு வழங்க நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ஆ.இராமு கோரிக்கை.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, NET/SET தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 50% உள் இட ஒதுக்கீடு வழங்க முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ஆ.இராமு அனுப்பியுள்ள கடிதத்தில், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், குறிப்பாக முனைவர் பட்டம் பெற்றவர்கள், NET/SET தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் இந்த பணியிடங்களுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 முதல் 15 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இந்த ஆசிரியர்கள், மாணவர்களை 100% தேர்ச்சி பெறச் செய்து, உயர் கல்விக்கு அவர்களை ஆயத்தப்படுத்துகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% உள் இட ஒதுக்கீடும், இளநிலை உதவியாளர்களுக்கு 2% பதவி உயர்வும் வழங்கப்படுவது போல, முதுகலை ஆசிரியர்களுக்கும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் உள் இட ஒதுக்கீடு வழங்க சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையும், உயர்கல்வித்துறையும் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள ஒரே துறைகள் என்பதால் 50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களின் பணிகள் ஏறக்குறைய சமமாகக் கருதப்பட்டதையும், ஊதிய வேறுபாடு குறைவாக இருந்ததையும் சுட்டிக்காட்டி, சமூக சம நீதியை நிலைநாட்ட இந்த உள் இட ஒதுக்கீடு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையின் நகல் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment