- பணியில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) கட்டாயமாக்குவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி வழக்கின் (SLP எண். 1385/2025, தீர்ப்பாணை நாள் 01.09.2025) தீர்ப்பைச் செயல்படுத்துவது குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- ஓய்வூதியத்திற்கு 5 ஆண்டுகளுக்கு குறைவாக சேவை உள்ள ஆசிரியர்கள்:
- TET-இல் தேர்ச்சி பெறாமல் ஓய்வு பெறும் வயது வரை பணியில் தொடரலாம்.
- ஆனால், பதவி உயர்வு பெற விரும்பினால், அவர்கள் TET-இல் தேர்ச்சி பெற வேண்டும்.
- ஓய்வூதியத்திற்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சேவை உள்ள ஆசிரியர்கள் (RTE சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் நியமிக்கப்பட்டவர்கள்):
- அவர்கள் பணியில் தொடர, தீர்ப்பாணை வெளியான நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் TET-இல் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
- இந்த காலக்கெடுவுக்குள் TET-இல் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்கள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு பணியிலிருந்து விலக வேண்டும்.
- கட்டாய ஓய்வூதியப் பலன்களைப் பெற, ஆசிரியர்கள் விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட தகுதிக்கான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு:
- பணி நியமனம் பெற விரும்புவோர் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் பெற விரும்பும் பணியில் உள்ள ஆசிரியர்கள் கட்டாயம் TET-இல் தேர்ச்சி பெற வேண்டும்.
- அரசின் முடிவும் சிறப்பு TET தேர்வுகளும்:
- உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிக எண்ணிக்கையிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் TET-இல் தேர்ச்சி பெற வேண்டியிருப்பதாலும், பதவி உயர்வுகளும் பாதிக்கப்படும் என்பதாலும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அரசைக் கோரினர்.
- ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு TET நடத்தலாம் என்றும், ஆசிரியர்களைத் தயார் செய்ய மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வார இறுதி நாட்களில் மாவட்டந்தோறும் பணியிடைப் பயிற்சி வழங்கலாம் என்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் பரிந்துரைத்தார்.
- பரிசீலனைக்குப் பிறகு, அரசு இந்தக் கருத்துருக்களை ஏற்றுக்கொண்டு, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான TET தேர்வுகளுடன் கூடுதலாக சிறப்பு TET தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளித்துள்ளது.
- 2026 ஆம் ஆண்டில் சிறப்பு TET தேர்வுகள் நடைபெறும் மாதங்கள்:
- ஜனவரி 2026
- ஜூலை 2026
- டிசம்பர் 2026
- 2026 ஆம் ஆண்டின் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 2027 ஆம் ஆண்டில் தேவைக்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தலைமை முகமையாக (Nodal Agency) நியமனம் செய்யப்பட்டுள்ளது.
- சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிக்கையை TRB விரைவில் வெளியிட உள்ளது.
- எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு,?
- தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?,
- எத்தனை மணி நேரம் தேர்வு? ,
- தேர்வு paper-ல் நடக்குமா?
- computer -ல் நடக்குமா? Syllabus என்ன?
- எப்போது எப்படி apply பண்ணுவது என்ற விபரத்தை மிக விரைவில் வெளியிட உள்ளது.
- மேலும் சிறப்பு TET நடத்த NCTE notification - ல் power to relax என மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment