வினாத்தாள் வெளியாவதை தடுக்க பள்ளிகளில் சோதனை முறையில் ஆண்டு தேர்வுகளை நடத்த புதிய முயற்சி கல்வித்துறை தீவிரம்

  • வினாத்தாள் வெளியாவதை தடுக்க சோதனை முறையில் ஆண்டு தேர்வுகளை நடத்த புதிய முயற்சியை கல்வித்துறை மேற்கொள்ள உள்ளது. 
  • புதிய முயற்சி 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத் தாள்கள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
  • இந்த தேர்வுக்கான வினாத்தாளை 'பிரிண்ட்' எடுக்க வெளித் தேவைகளை அணுகுவதால், அதன் மூலம் வினாத்தாள் வெளியாகும் சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறி வருகின்றன. 
  • இதனை தடுக்கும் வக யில் கல்வித்துறை புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது. அதன்படி. அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள் ளிகளில் ‘பிரிண்டர்' வழங்கி, தேர்வு நடைபெறும் நாளன்று காலையில் பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப் பட உள்ளது. இதன் மூலம் வினாத்தாள் வெளியாவது தடுக்கமுடியும் என்று கல்வித் துறை நம்புகிறது. 
  • பள்ளிகளுக்கு பிரிண்டர் அதன்படி, சோதனை முறையில் தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, கிருஷ்ண கிரி, சேலம், நீலகிரி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 9 மாவட் டங்களில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பட்டு, அதனைக்கொண்டு வினாத்தாள் பிரிண்ட்செய்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையலான மாணவர்களுக்குதேர்வு நடத்தப்பட இருக்கிறது. 
  • இதற்கான பிரிண்டர்கள் 'எல்காட்' நிறுவனம் வாயிலாக வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் 9 மாவட்டங்களில் உள்ள 4 ஆயிரத்து 170 நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு பிரிண்டர் வீதம், 4 ஆயிரத்து 170 பிரிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. 
  • சோதனை முறையில்... 500 மாணவர்களுக்குகுறைவாக உள்ள பள்ளிகள், 500 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள பள்ளிகள் என தரம்பிரித்து அதற்கேற்ற திறன் கொண்ட பிரிண்டர்களை பள்ளிகளுக்கு கல்வித்துறை வழங்குகிறது. 
  • சோதனை முறையில் கல்வித்துறைமேற்கொள்ள இருக் கும் இந்த முயற்சி, அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள ஆண்டு இறுதித்தேர்வில் செயல்படுத்தப்பட உள்ளது.

  • NEED MORE ? | CLICK HERE

Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2023-2024 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||