× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்படும்

  • பட்ஜெட்டில் பள்ளிகல்விதுறைக்கு ரூ.40,299 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • அதன் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் விவரம் வருமாறு:- அரசு பள்ளிகளில் வரும் நிதியாண்டில், புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப் றைகள் என மொத்தம் ரூ.1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். 
  • 'எண்ணும் எழுத்தும் திட்டமானது' 2025-ம் ஆண்டுக்குள் 1 முதல் 3-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப் படை கல்வியறிவும், எண்கணிதத் திறனும் அடைவதைநோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும்நிதியாண்டில் ரூ.110 கோடி செலவில் 4-ம், 5-ம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். 
  • சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகதிருவிழாக் களும், 5 இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் ரூ.10 கோடி நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும். 
  • பள்ளி கல்வித்துறையின் கீழ் பள்ளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணிப்பயன்களும் பாதுகாக்கப்படும். 
  • அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வஉதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களை குறைக்கவும், தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுவதை உறுதிசெய் யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித் தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும். 
  • மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வரு கிறது. முதற்கட்டமாக, இந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்து வம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும். இந்நூலகம், "கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என்ற பெயரைத் தாங்கி, வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • NEED THIS DOCUMENT ? | DOWNLOAD

  • NEED MORE ? | CLICK HERE

Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2023-2024 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||