மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல்: அமலாக்கத் துறை சோதனை

  • மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். 
  • மேற்கு வங்கத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள், இதர பணியிடங்கள் உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கு திரிணமூல் தலைவர் சாந்தனு பானர்ஜி லஞ் சம் பெற்று ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந் தது. அதையடுத்து, அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  • திரிணமூல் கட்சி யில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், ஹூக்ளி மாவட்டத்தில் அவருக்குச் சொந்தமாக உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர். அமலாக்கத் துறையினர் 6 குழுக்களாகப் பிரிந்து இச்சோதனையில் ஈடுபட்ட னர். 
  • பாலாகர், பந்தேல், சின்சுரா உள்ளிட்ட இடங்களில் சாந்தனு பானர்ஜிக்குச் சொந்தமாக உள்ள வீடுகளில் அம லாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சேகரிக் கும் நோக்கில் இச்சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • NEED THIS DOCUMENT ? | DOWNLOAD

  • NEED MORE ? | CLICK HERE

Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2022-2023 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||