அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதா? பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் எச்சரிக்கை

  • சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதேபோல், மற்ற வகுப்பு மாணவர்க ளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 
  • சில பள்ளிகளில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சிலவற்றில், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை இப்போதே தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் குறிப்பாக, அடுத்த கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்புக்கு செல்லும் மாண வர்களுக்கு தற்போதே வகுப்புகள் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 
  • இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின்கீழ் இணைப் பில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- ஒரு முழு ஆண்டுக்கான பாடப்பணியை குறைந்த காலக் கெடுவுக்குள் முடிக்கபள்ளிகள் முயற்சிப்பது, மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். 
  • இந்த கற்றலின் வேகம், மாணவர்களைகவலை அடைய செய்வதோடு, அவர்களுக்கு எரிச்சலையும் தூண்டும். இதனால் அவர்களின் வாழ்க்கை திறன்கள், மதிப்பு கல்வி, சுகாதாரம், உடற்கல்வி, சமூகசேவை போன்ற பாடநெறிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளுக்கு போதுமான நேரம் கிடைப்பது இல்லை. 
  • எனவே, சி.பி.எஸ்.இ. வாரியத்துடன் இணைந்த பள்ளி களின் முதல்வர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், ஏப்ரல் 1-ந்தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரையிலான கல்வி ஆண்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக கல்வி அமர்வுகளை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • NEED THIS DOCUMENT ? | DOWNLOAD

  • NEED MORE ? | CLICK HERE

Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2022-2023 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||