- கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு புதிய மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், இது அடுத்த கல்வியாண்டு (2023-24) முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தக வல்கள் வெளியாகியுள்ளன.
- மாதிரி பாடத்திட்டம் கலை மற்றும் அறிவியல் கல் லூரி படிப்புகளுக்கான பாடத் திட்டத்தை மாற்றி அமைத்து, தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை வகுக்கும் முயற்சியில் உயர்கல் வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் முக்கிய பங்கை தமிழ்நாடு மாநில உயர் கல்வி கவுன்சில் செய்து வரு கிறது.
- அதன்படி, 50 இளங்கலை, 75 முதுகலை என மொத்தம் 127 பாடத் திட்டங்களுக்கான மாதிரி பாடத்திட்டத்தை தமிழ் நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.தொழில்துறை உள்ளீடுகள், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்கள், நான் முதல் வன் திட்டம் ஆகியவற்றை அடிப்படையில் பாடங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும், வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் மற்றும் மென் திறன்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், மாநி லம் முழுவதும் இதேபோன்ற பாடத்திட்டத்தை பின்பற்று வது, ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து மற்றொரு பல்கலைக் கழகத்துக்கு மாணவர்கள்செல் வதற்கு வசதியாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மாநில உயர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
- புதிய மதிப்பெண் முறை குறிப்பாக, இளங்கலை படிப் புகளுக்கான மாதிரி பாடத்திட் டத்தில் பி.காம்., பி.பி.ஏ.பி.சி.ஏ. உள்ளிட்டபடிப்புகளுக்கு ஏற்க னவே முதல் 2 செமஸ்டர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருந்த நிலையில், தற்போது 3 மற்றும் 4-வது செமஸ்டர்களிலும் அறி முகப்படுத்தப்பட உள்ளது. மாதிரி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான புதிய மதிப்பெண் முறையும் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியா கியிருக்கின்றன.
- அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் கலை மற் றும் அறிவியல் பாடப்பிரிவு களில் படிக்கும் மாணவர்க ளுக்கு 75 சதவீத மதிப்பெண்க ளுக்கு செமஸ்டர் தேர்வும், 25 சதவீத மதிப்பெண்களுக்கு அகமதிப்பீடு தேர்வும் நடத்தப் படும் என்று கூறப்படுகிறது.
- அதாவது, 75:25 என்ற விகிதத் தில் மதிப்பெண் முறை கொண்டு வரப்படுகிறது. தன் னாட்சி கல்லூரிகளைபொறுத் தவரையில் 50:50, 60:40 என்ற விகிதத்தில் மதிப்பெண் முறை நடைமுறையில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த கல்வியாண்டில் அமல் தமிழ்நாடு மாநில உயர் கல்விகவுன்சிலால் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மதிப்பெண் நடை முறை, பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு, பல்கலைக் கழக துணைவேந்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக சொல்லப்படு கிறது. இந்த மதிப்பெண் முறை அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகள், இணைப்பு மற்றும் இணைப் பில் இல்லாத கல்லூரிகளில் மாணவர்களின் மதிப்பீட்டில் சீரான தன்மையை கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய மதிப்பெண் முறை அடுத்த கல்வியாண் டில் (2023-24) அமலுக்குவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2022-2023 | Click Here
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||