IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் குறித்து கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரின் காணொளிக் கூட்டம் 02-08-2024 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
-
களஞ்சியம் செயலி (KALANJIYAM MOBILE APP):
- அனைத்து அரசுப் பணியாளர்களும் தங்கள் மொபைலில் களஞ்சியம் செயலியை நிறுவி, தங்கள் விவரங்களை (Profile, Leave, Payslip, Reports) சரிபார்க்க வேண்டும்.
- விடுப்பு எடுக்க விரும்புபவர்கள் களஞ்சியம் மொபைல் செயலி மூலம் விடுப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தற்செயல் விடுப்பு, ஈடுசெய்யும் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்புகளைத் தவிர மற்ற விடுப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அனுமதி பெற்ற பிறகே ஊதியம் வழங்கப்படும்.
- பண்டிகை முன்பணம், குறுகிய கால முன்பணம் போன்ற முன்பண விண்ணப்பங்களும் களஞ்சியம் மொபைல் செயலி மூலமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- செயலியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், Feedback Report அனுப்ப வேண்டும். விடுப்பு விவரங்களை முழுமையாகப் பதிவு செய்ய, Navigation Path (HR - Report View - Employee List view Details) மூலம் Web id-யில் பதிவிட்டு ஏற்பளிக்க வேண்டும்.
- அனைத்து அரசுப் பணியாளர்களும் தங்கள் மொபைலில் களஞ்சியம் செயலியை நிறுவி, தங்கள் விவரங்களை (Profile, Leave, Payslip, Reports) சரிபார்க்க வேண்டும்.
-
வருடாந்திர ஊதிய உயர்வு (Annual Increment):
- வருடாந்திர ஊதிய உயர்வுகளை IFHRMS-ல் உள்ள Annual Increment Module-ஐப் பயன்படுத்தி மட்டுமே வழங்க வேண்டும். 'Update Salary Option'-ஐப் பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் அது அடுத்த ஆண்டு ஊதிய உயர்வுகளை தானாகப் புதுப்பிக்காது.
-
டிஜிட்டல் தணிக்கை மற்றும் கணக்கியல் அமைப்புகள் (Digital Audit and Accounting Systems (DAAS)):
- ஊதியம் மற்றும் ஊதியம் அல்லாத பட்டியல்கள் (Salary and Non Salary Bills) தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (Proceeding Order, Increment Copy, Post Continuation Order, Relating Government Orders and Non Salary Bills - Bill Number and Date, Voucher Cancellation Certificate, Supporting Vouchers, Orders, Stock Entry Certificate, Passed for payments, Paid by me.. etc.,) DDO கையொப்பமிட்டு ஸ்கேன் செய்து IFHRMS-ல் கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் பட்டியல்கள் தணிக்கை செய்யப்படும்.
-
GPF சந்தா (GPF Subscription):
- GPF சந்தா ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) மிகாமல் இருக்க வேண்டும் (மாதத்திற்கு ரூ.40,000/- மிகாமல்).
இந்த விவரங்கள் அனைத்தையும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
No comments:
Post a Comment