'பள்ளி சாரம்' டிஜிட்டல் தளத்தில் அரசுப் பள்ளிகளின் விவரங்களை பதிவேற்ற தனிப்பக்கம் உருவாக்கப்படுவதாகக் கல்வித் துறை தெரிவித்தது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சிறு, மற்று நிறுவனங்கள், அரச சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் செயலாற்றிட ஏதுவாக நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி என்ற இணையதளமும், அதற்காக தனியாக வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டு தற்போது அச் செயல்பாட்டில் உள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட ரூ.658 கோடியே 67 லட்சம் நிதி திரட்டப்பட்டு, அதன் மூலம் அரசுப் பள்ளிகள் உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகள் பற்றிய ஆக்கப்பூர்வமான தகவல்களை பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 'பள்ளி சாரம்' என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு உருவாக்கப்படட இந்த டிஜிட்டல் தளத்தில் ஒவ்வொரு அரசு பள்ளியின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் மாணவர் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளுக்கான தனிப்பக்கத்தை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்கிறது.
இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளின் தரம், வளர்ச்சி மற்றும் மாற்றங்களை தன்னார்வமாக தெரிந்து கொள்ளலாம் என்றும், அதனை அடிப்படையாக கொண்டு முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் அரசுப் பள்ளிகளின் சேவைகளை அறிந்து பங்கு வசிக்கும் வகையில் இந்த தனிப்பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment