பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2025 | SCHOOL MORNING PRAYER ACTIVITY PDF DOWNLOAD | பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
திருக்குறள்:
- குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
- விளக்க உரை: உலகம் பல்வேறு தொழில்களைச் செய்து இயங்கினாலும், இறுதியில் அது உழவுத் தொழிலை நம்பியே நிற்கிறது. எனவே, எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும், உழவுத் தொழிலே மிகச் சிறந்ததாகும்.
பழமொழி:
- Life is a poetry written by our actions.
- நமது செயல்களால் எழுதப்படும் கவிதை தான் வாழ்க்கை.
பொன்மொழி:
- ஒருவருக்கு ஏற்படும் பயம் நீங்கும் போது ஏற்படும் நம்பிக்கையே அதிக மகிழ்ச்சி அளிக்கும் - ஸ்காட்
இரண்டொழுக்கப் பண்புகள்:
- எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.
- காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவதுடன், மரங்களை அழிக்கவும் அது மறைமுகக் காரணமாகிவிடும்.
பொது அறிவு:
- இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் பெயர் என்ன?
- ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant)
- இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?
- கோழிக்கோடு- கேரளா (Kozhikode, Kerala)
ஆங்கிலச் சொற்கள்:
- sit tight: stay in your place (உள்ள இடத்திலேயே இருத்தல்)
- isolated: alone or separated (தனியாக அல்லது பிரிக்கப்பட்ட)
தமிழ் இலக்கணம் (காற்புள்ளி):
- பயன்படுத்தும் இடம்: பட்டியலிடும்போது தொடர்ச்சியான வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
- எடுத்துக்காட்டு: நான் பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்களை வாங்கினேன்.
அறிவியல் களஞ்சியம் (மோனல் பறவை):
- இந்தப் பறவை இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மாநிலப் பறவையாகவும், நேபாளத்தின் தேசியப் பறவையாகவும் உள்ளது.
- இது இந்தியா (குறிப்பாக இமாச்சலப் பிரதேசம்) தவிர பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம் காணப்படுகிறது.
- ஆண் பறவை அழகிய பல வண்ணங்களில் இருக்கும்; பெண் பறவை வண்ணமற்றுச் சாதாரணமாகக் காணப்படும்.
- இதன் அழகிய இறகுகளுக்காக வேட்டையாடப்படுவதால், இது அழியும் நிலையில் உள்ளது.
இன்றைய முக்கிய தினங்கள்: டிசம்பர் 11
- சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாள் (டிசம்பர் 11, 1882):
- இவர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
- நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
- இவருக்கு எட்டப்ப நாயக்கர் மன்னரால் 'கலைமகள் எனப் பொருள்படும் பாரதி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- இவருடைய நூல்கள் 1949-இல் தமிழ்நாடு அரசினால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன (இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம்).
- பாரதிதாசனால் 'சிந்துக்குத் தந்தை', 'செந்தமிழ்த் தேனீ', 'புதிய அறம் பாட வந்த அறிஞர்', 'மறம் பாட வந்த மறவன்' என்றெல்லாம் புகழப்பட்டவர்.
- 'இந்தியா', 'விஜயா' போன்ற இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
- விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.
- பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள் (டிசம்பர் 11, 1935):
- இவர் 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13 ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர்.
- மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதி; குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சராக இருந்தார்.
- பன்னாட்டு மலை நாள் (International Mountain Day):
- மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) முன்னின்று நடத்துகிறது. 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை இந்நாளை அறிவித்தது.
நீதிக்கதை (அன்னையின் வளர்ப்பு):
நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் இளம் வயதில் சிறந்த அறிவாளியாக இருந்தும், எந்த வேலையையும் ஒருமுகப்பாட்டுடன் செய்யவில்லை. இதைக் கண்ட அவர் தாயார், ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியை வெயிலில் பிடித்துக் காகிதத்தின் மேல் ஒளியைக் குவித்தார். ஒருமுகப்படுத்தப்பட்ட ஒளியினால் காகிதம் தீப்பற்றி எரிந்தது. அப்போது அவர் தாயார், "ஒருமுகப்படுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகப்படுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம்" என்று அறிவுரை கூறினார். தாயாரின் வார்த்தைகளை மனதில் வைத்து, மன ஒருமைப்பாட்டுடன் செயல்படத் தொடங்கிய அந்த விஞ்ஞானியே பிற்காலத்தில் உலகமே போற்றும் சர். சி. வி இராமன் ஆனார்.
இன்றைய செய்திகள் (11.12.2025):
- தமிழகச் செய்தி: தமிழகத்தில் தற்போதுள்ள 40 சிப்காட் தொழில் பூங்காக்களுடன் மேலும் 21 இடங்களில் தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தேசியச் செய்தி: 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் யுபிஐ மூலம் 12,930 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. உலகளவில் யுபிஐ பரிவர்த்தனை முறையில் இந்தியாவின் பங்கு 49% ஆக உள்ளது.
- சர்வதேசச் செய்தி: வெளிநாட்டினருக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கும் அமெரிக்கா, 2025-ல் இதுவரை 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்:
- பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார்; விராட் கோலி (773 புள்ளிகள்) இரண்டு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) 100 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜஸ்பிரித் பும்ரா வரலாறு படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் இவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை நிறைவு செய்தார்.
Today's Headlines
- ⭐While there are 40 SIPCOT industrial parks in Tamil Nadu, the Tamil Nadu government is taking steps to set up industrial parks in 21 more locations.
- ⭐India's UPI transactions reached 12,930 crore in the financial year 2024-25. India's UPI transaction system has a 49% share globally
- ⭐85,000 visas have been canceled so far in 2025. The United States imposes strict restrictions on foreigners
SPORTS NEWS
- 🏀Indian batsman Rohit Sharma (781 points) continues to lead the batsmen rankings. Virat Kohli (773 points) has moved up two places to take second place.
- 🏀The only Indian player to achieve in all 3 formats of cricket - Bumrah creates history. Jasprit Bumrah took 2 wickets against South Africa yesterday. He has taken 100 wickets in T20 cricket.
















No comments:
Post a Comment