- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இணைய வழி மருத்துவமனை நிர்வாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
- இப்பயிற்சியானது தாட்கோ மற்றும் அப்போலோ மெட் ஸ்கில்ஸ் நிறுவனம் சார்பில் இளங்கலை நர்சிங் முடித்த சென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடியதாக வழங்கப்படுகிறது.
- இதற்கான செலவீனத்தை தாட்கோ ஏற்றுக்கொள்கிறது.
- பயிற்சி காலம்: முதல் 2 வாரங்களுக்கு இணையவழியிலும், அடுத்த 4 வாரங்களுக்கு அப்போலோ மருத்துவமனைகள் அல்லது அப்போலோ தொடர்புடைய பிற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியாகவும் வழங்கப்படும்.
- ஊக்கத் தொகை: பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
- வேலைவாய்ப்பு: பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்போலோ மருத்துவமனைகளிலும், அது தொடர்புடைய முன்னணி மருத்துவமனைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
- தகுதி:
- 2022, 2023, 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப் படிப்பில் நர்சிங் முடித்த மாணவர்கள்.
- கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம்.
- கூடுதல் வாய்ப்பு: அப்போலோ மெட் ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 'ஃபைன்' எனப்படும் செவிலியர் பயிற்சியையும் பெறலாம்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨ தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/tahdco.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital

















No comments:
Post a Comment