- ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசு கால அவகாசம் கோரியது.
- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜரானார்.
- CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் தொடர்ந்த வழக்கு நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (17.12.2025) விசாரணைக்கு வந்தது.
- புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழக அரசின் சார்பில் எழுத்துப்பூர்வமாகப் பதில் வழங்கப்பட்டது.
- மனுதாரர் தரப்பு வாதம்:
- இந்தியாவில் முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- ஊழியரின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, அரசின் பங்களிப்பாக 10% வழங்கப்பட்டு, பணி ஓய்வின்போது ஒட்டுமொத்தமாக வழங்கப்படுகிறது.
- PFRDA-ல் அனைத்து மாநிலங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஓய்வூதியத் தொகை அதன் பராமரிப்பில் உள்ளது.
- பல மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் CPS திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை, பணிக்கொடையும் இல்லை, விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை.
- பல மாநிலங்கள் அரசின் பங்களிப்பாக 14% உயர்த்தி வழங்கி வருகின்றனர்.
- 1978 ஓய்வூதிய விதிகளின்படி பழைய திட்டத்தில் பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதும் ஒன்று.
- 2019 ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நீதியரசர் கே. கே. சசிதரன் அமர்வில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அறிக்கை இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை, பழைய திட்டம் ஊழியர்களுக்குப் பாதுகாப்பானது.
- அரசு வழக்கறிஞர் மற்றும் தலைமை வழக்கறிஞர் தரப்பு வாதம்:
- 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.
- மனுதாரர் 2005-ல் பணியில் சேர்ந்துள்ளார், 2012-ல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- அரசாணை எண்கள்: 430, 59-ன்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியத்தை வரையறை செய்துள்ளோம்.
- நீதியரசர் சிவஞானம் அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கினைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
- மனுதாரர் தமிழில் வினாக்கள் கொடுத்ததால் நாங்களும் தமிழில் பதில் வழங்கியுள்ளோம்.
- இது பற்றி தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.
- நீதியரசர்கள் அரசிற்கு கால அவகாசம் வழங்கி 06.01.2026 அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
✨ ஓய்வூதிய வழக்கில் கால அவகாசம் கோரிய தமிழ்நாடு அரசு: உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்தது.
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/cps-case.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital
















No comments:
Post a Comment