- தேர்வு: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE)
- யாருக்கானது: 2025-2026 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள்.
- தேர்வு நடைபெறும் நாள்: 31.01.2026 (சனிக்கிழமை)
- மொத்தமாக தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை: 1000 பேர் (மாணவர்கள்: 500 பேர், மாணவியர்கள்: 500 பேர்).
- தெரிவு செய்யும் முறை: நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில்.
- உதவித்தொகை: இளநிலை பட்டப்படிப்பு வரை ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000/- (மாதம் ரூ.1000/- வீதம்) வழங்கப்படும்.
- தேர்வு முறை: கொள்குறிவகையில் (Objective type) இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
- பாடத்திட்டம்: தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் உள்ள கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத்திட்டங்கள்.
- தேர்வு அமைப்பு:
- தாள் 1 (கணிதம்): 60 வினாக்கள் - காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை.
- தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல்): 60 வினாக்கள் - பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை.
- விண்ணப்பப் பதிவிறக்க நாட்கள்: 18.12.2025 முதல் 26.12.2025 வரை.
- இணையதளம்: www.dge.tn.gov.in
- விண்ணப்பக் கட்டணம்: ரூ. 50/-
- விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ. 50/- ஐ சேர்த்து, 26.12.2025-க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment