தலைப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) - உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon) பணிக்கான சிறப்புத்தேர்வு அறிவிக்கை.
அறிவிக்கை விவரம்: தமிழ்நாடு மருத்துவப் பணியின் கீழ் தற்காலிக அடிப்படையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுப் பணிபுரியும் தகுதியுடையவர்களுக்கான ‘சிறப்பு தகுதித் தேர்விற்கு’ (Special Qualifying Examination) இணையவழி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
முக்கிய விபரங்கள்:
- பதவியின் பெயர்: சிறப்பு தகுதித் தேர்வு (தற்காலிகமாக நியமிக்கப்பட்ட உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மட்டும்).
- காலியிடங்களின் எண்ணிக்கை: 117
- ஊதிய விகிதம்: மாதம் ரூ. 56,100/- முதல் ரூ. 2,05,700/- வரை (ஊதிய அணி நிலை - 22).
முக்கிய நாட்கள்:
- இணையவழிப் பதிவு தொடங்கும் நாள்: 24.12.2025
- விண்ணப்பம் சமர்ப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த இறுதி நாள்: 13.01.2026
விண்ணப்பக் கட்டணம்:
- பட்டியலினத்தவர் / பழங்குடியினர் / மாற்றுத்திறனாளிகள் (SC / SCA / ST / DAP): ரூ. 500/-
- பிற பிரிவினர்: ரூ. 1000/-
விண்ணப்பிக்கும் வழிமுறை:
- விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் இதர நிபந்தனைகள் தொடர்பான முழுமையான விவரங்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையில் அறிந்துகொள்ளலாம்.
அறிவிக்கை எண்: 23/MRB/2025 வெளியிடப்பட்ட நாள்: 24.12.2025
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
Share this Post
✨ MRB உதவி அறுவை சிகிச்சை நிபுணர் சிறப்புத் தேர்வு அறிவிப்பு: 117 காலியிடங்கள்.
🔗 Link : https://www.kalvisolai.com/2025/12/mrb-117.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*
🌗 Arattai : https://aratt.ai/@kalvisolai
🌗 Telegram : https://telegram.me/kalvisolai_digital

















No comments:
Post a Comment