- எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுவைச் சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளின் உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இந்தியாவில் கல்வி பயிலும் எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவித்தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
- உலகத் தலைவர்களில் முதன்முறையாக, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கிக் கௌரவம் அளிக்கப்பட்டது; இந்த விருதை 140 கோடி இந்திய மக்களுக்கும் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- கிராமப்புற வேலைவாய்ப்புக்கான புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இலக்கிற்கேற்ப இந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத்திட்டம்) கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பெயர் மாற்றத்தைக் கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
- மகாத்மா காந்தி திட்டத்தின் பெயர் மாற்றத்திற்குப் பிரதமர் மோடியின் வெறுப்பே காரணம் என்றும், கிராமப்புற மக்களின் உயிர்நாடியாக உள்ள திட்டத்தை பாஜக அரசு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
- மக்களவையில் பேசிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ராமராஜ்ஜியம் வேண்டும் என்றவர் மகாத்மா காந்தி எனக் குறிப்பிட்டு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ராமர் பெயரைச் சூட்டுவதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
- மேற்குவங்கம், ராஜஸ்தான், புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- திருவள்ளூரில் அரசுப் பள்ளி சுவர் இடிந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
- மாணவர்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். துறைசார்ந்த பணிகளில் என்றைக்காவது அமைச்சர் செலவிட்டிருக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment