- அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- இந்தத் தீர்ப்பின் காரணமாக, கடந்த 27 ஆண்டுகளாக பணி நிரந்தரத்தை எதிர்பார்த்திருக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் தங்கள் கனவு பலிக்குமா என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.
சிறப்பு பயிற்றுநர்களின் பணி மற்றும் தற்போதைய நிலை:
- 1998 முதல் 2025 வரை, வட்டார வள மைய சிறப்பு பயிற்றுநர்கள், பள்ளிக்கல்வித்துறையின் DPEP, SSA, மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SS) திட்டங்களின் கீழ் தொடர்ந்து தற்காலிக மதிப்பூதியம் பெறும் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
- 1998 முதல் 2012 வரை இவர்கள் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மூலம் பணியாற்றினர்.
- 2012 இல், தொண்டு நிறுவனங்கள் மீதான புகார்களை அடுத்து, அவை நிறுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வியை செயல்படுத்தத் தொடங்கியது.
- 2012 இல் பணியேற்பு ஆணை எதுவும் வழங்கப்படாததால், சிறப்பு பயிற்றுநர்கள் எந்தவித அடிப்படை சலுகைகளும் இன்றி, குறைந்த மதிப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
TN-SS-SEADAS சிறப்பு பயிற்றுநர்கள் மாநில சங்கம் சார்பில் முதலமைச்சர், ஆளுநர், கல்வித் துறை அமைச்சர், செயலர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்:
- பணிநிரந்தர ஆணை
- இபிஎப் பிடித்தம் (நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் இது இதுவரை செயல்படுத்தப்படவில்லை)
- ஊதிய உயர்வு
- மதிப்பூதியம் தவிர்த்து தொகுப்பூதியம்
- மாற்றுத்திறனாளி ஊர்திப் படி
- விழாக்கால முன்பணம் ரூ. 20,000/-
- மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாறுதல்
போராட்ட வடிவம்:
- தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 24/11/2025 முதல் காந்திய வழியில், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 'நலம் நாடி' செயலியைப் புறக்கணிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்தப் புறக்கணிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முறையாக முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
- 09.01.2024 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் தொடங்கப்பட்ட 'நலம் நாடி' செயலி, 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சேவைப் பணிகளுக்காகச் சிறப்பு பயிற்றுநர்களால் பயன்படுத்தப்படுகிறது.
- செயலி புறக்கணிப்பிலும், 0-18 வயதுடைய மற்றும் 1-12 வகுப்புகளில் உள்ள 1.25 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, கற்றல் குறைபாடு களைய தனிக்கவனம் உள்ளிட்ட போற்றுதலுக்குரிய சேவைகளை 1600 சிறப்பு பயிற்றுநர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகளும் பெற்றோர்களும் பயனடைந்து வருகின்றனர்.
பணிநிரந்தரம் குறித்த நிதித் தகவல்:
- ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்கள் மாநில அரசால் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும்.
- தமிழக அரசு, 1-8 வகுப்புகளில் சிறப்பு பயிற்றுநர் பணியிடங்களை உருவாக்கி பணி நிரந்தரம் செய்ய சுமார் ரூ. 80 கோடி தேவை என நிதித்துறை மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.
- இதில் மத்திய அரசின் (MHRD) மனிதவள மேம்பாட்டுத்துறை ஆண்டுதோறும் 12 மாதங்களுக்கு ரூ. 35 கோடி நிதியினை வழங்குகிறது.
- எனவே, தமிழக அரசு மீதமுள்ள ரூ. 45 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்தாலே, 1600 சிறப்பு பயிற்றுநர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியும் என கிருஷ்ணகிரி மாவட்ட மூத்த சிறப்பு பயிற்றுநரும், 2024 ஆம் ஆண்டில் சிறந்த ஆசிரியர் மாநில விருது பெற்றவருமான அருண்குமார் தெரிவித்துள்ளார்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.


















No comments:
Post a Comment