- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றி அறிக்கை அளிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவு பிறப்பித்தார்; பாதுகாப்பு கருதி, மலை மீது செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
- சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் தொடரும் பதற்றத்தின் காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறி, தேவையில்லா பதற்றத்தை திமுக அரசு உருவாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
- திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்னையை உருவாக்குகிறார்கள் என்றும், மதவாதிகள் எவ்வழியேனும் காலூன்ற எண்ணுகிறார்கள் என்றும் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்து கண்டனம் தெரிவித்தார்.
- திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை உபா சட்டத்தில் கைது செய்யுமாறு திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினார்.
- தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 77 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; சென்னையில் மட்டும் 10 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
- இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புடின்; டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.
- ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு இரவு விருந்தளித்து உபசரித்த பிரதமர் மோடி, பகவத் கீதை புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கி கவுரவித்தார்.
- இந்தியா, ரஷ்யா இடையேயான 23ஆவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்; வர்த்தகம், பாதுகாப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment