பிரதம மந்திரியின் PM YASASVI Top Class School Education கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
- மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2025
- குறைபாடுள்ள விண்ணப்பங்கள் மற்றும் பள்ளி அளவில் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான கடைசி தேதி: 31.12.2025
திட்ட விவரங்கள்:
- யார் விண்ணப்பிக்கலாம்: பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் OBC, EBC (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்) மற்றும் DNT (சீர்மரபினர்) இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்கள்.
- வருமான வரம்பு: பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் முறை: மாணவ/மாணவியர்கள் NSP (National Scholarship Portal) இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். புதிய விண்ணப்பங்கள் (Fresh) மற்றும் புதுப்பித்தல் (Renewal) இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம்.
அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்:
நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தை மாணவ/மாணவியர்கள் அறியும் வண்ணம் பத்திரிக்கைச் செய்தி வெளியிடவும், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குத் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பள்ளி அளவில் நிலுவையில் உள்ள மற்றும் குறைபாடுள்ள விண்ணப்பங்களை உடனே சரிபார்த்து approve செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment